கீழே தள்ளி முதியவர் கொலை

பட்டுக்கோட்டை அருகே மகனுடன் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட முதியவர் கீழே தள்ளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக விவசாயி கைது செய்யப்பட்டார்.;

Update:2023-01-19 02:00 IST

பட்டுக்கோட்டை, ;

பட்டுக்கோட்டை அருகே மகனுடன் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட முதியவர் கீழே தள்ளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக விவசாயி கைது செய்யப்பட்டார்.

கபடி போட்டி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மகாராஜசமுத்திரம் உடையார் தெரு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 88). இவருடைய மகன் சீதாராமன் (42). சம்பவத்தன்று அந்த பகுதியில் பொங்கல் விழா கபடி விளையாட்டு போட்டி நடைபெற்றது. அந்த போட்டிக்கு சீதாராமன் நடுவராக இருந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜவேல் மகன் சிவகுமார்(51). இவர் நடுவர் சீதாராமன் குறித்து அவதூறாக பேசி கபடி போட்டி பற்றி உனக்கு என்ன தெரியும்? என்று சீதாராமனிடம் கேட்டு வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

கைது

இந்தநிலையில் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் சீதாராமன் வீட்டுக்கு சென்ற சிவகுமார், சீதாராமனிடம் தகராறு செய்தார். அப்போது சத்தம் கேட்டு வெளியே வந்த சீதாராமனின் தந்தை கணேசன், சிவகுமாரை தட்டிக்கேட்டார். அப்போது ஆத்திரம் அடைந்த சிவகுமார் முதியவர் கணேசனை தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதில் ஜன்னல் கம்பியில் தலை மோதியதில் கணேசன் மயங்கி விழுந்தார்.அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கணேசன் வரும் வழியில் இறந்த விட்டதாக கூறினர். இதுகுறித்து சீதாராமன் பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சிவகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்