ஸ்கூட்டர் மோதி முதியவர் பலி

Update: 2023-07-09 16:53 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கூடநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வாசு (வயது 74), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை சைக்கிளில் மேல்ஆலத்தூர் மின்சார வாரிய அலுவலகம் அருகே உள்ள டீக்கடையில் டீ குடித்துவிட்டு மீண்டும் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.

மேல்ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ச்சனா என்பவர் ஸ்கூட்டரில் குடியாத்தம் நோக்கி வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வாசுவின் சைக்கிள் மீது ஸ்கூட்டர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த வாசுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்