Old man killed in car collisionதுவரங்குறிச்சி அருகே உள்ள அடைக்கம்பட்டியை சேர்ந்தவர் ஆண்டியப்பன்(வயது 65). இவர் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெங்கட்நாயக்கன்பட்டி பிரிவு சாலை அருகே நடந்து சென்றார். அப்போது விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் ஆண்டியப்பன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திேலயே பரிதாபமாக இறந்தார். அவரது உடலை துவரங்குறிச்சி போலீசார் கைப்பற்றி மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.