கோவை
கோவை வெள்ளலூர் இடையர்பாளையம் படேல் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 60). இவர் நேற்று முன்தினம் மொபட்டில் வெள்ளலூர் பிரிவு எல் அண்டு டி பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணசாமிக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கிருஷ்ணசாமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து தொடர்பாக கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.