குளத்தில் மூழ்கி முதியவர் பலி

குளத்தில் மூழ்கி முதியவர் பலி

Update: 2023-06-05 18:45 GMT

அஞ்சுகிராமம், 

குலசேகரபுரத்தைச் சேர்ந்தவர் கேசவன் (வயது 88). இவர் அங்குள்ள பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் தங்கி வந்தார். மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் உணவு வாங்கி சாப்பிட்டு உயிர் வாழ்ந்தார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள ஒரு குளத்தில் குளிக்க சென்றார். அப்போது அவர் திடீரென கால் வழுக்கி குளத்தில் தவறி விழுந்து விட்டார். இதனால் தண்ணீரில் மூழ்கிய அவர் மூச்சுதிணறி பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்