மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் இறந்தார்.

Update: 2022-12-06 19:13 GMT

ஆலங்குடி அருகே கம்மங்காடு கீழப்பட்டியை சேர்ந்தவர் கருவன் (வயது 60). விவசாயி. இவர் மோட்டார் சைக்கிளில் மூக்கம்பட்டியில் இருந்து கம்மங்காடு ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற போது, பின்னால் வந்த மூக்கம்பட்டியை சேர்ந்த தர்மராஜ் மகன் தினேஷ் (22) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், முதியவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். படுகாயமடைந்த தினேசும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து செம்பட்டிவிடுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்