மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் இறந்தார்.

Update: 2022-11-30 18:34 GMT

அறந்தாங்கி அருகே குருந்திரகோட்டையை சேர்ந்தவர் முருகன் (வயது 65). நேற்று முன்தினம் இவரது மகள் வளைகாப்பிற்கு அறந்தாங்கிக்கு வந்து பொருட்களை வாங்கி விட்டு பஸ்சில் குருந்திரகோட்டை பஸ் நிறுத்தத்தில் வந்து இறங்கினார். பின்னர் அவர் அங்குள்ள சாலையை கடக்க முயன்ற போது, அந்த வழியாக பட்டுகோட்டையை சேர்ந்த முனுசாமி (45) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக முதியவர் மீது மோதியது. இதில் முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்