கார் மோதி முதியவர் சாவு
திசையன்விளையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.
திசையன்விளை:
திசையன்விளை வெற்றிவிளை தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 72). இவர் திசையன்விளை- உடன்குடி ரோட்டில் அப்புவிளை செல்லும் சாலை பிரியும் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் அப்போது அந்த வழியாக வந்த கார், மோட்டார் சைக்கிள் பின்னால் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக பாளையங்கோட்டை கல்யாணி நகரைச் சேர்ந்த கார் டிரைவர் ஜெயசேகரனை திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.