தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
தேனி அருகே தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
தேனி அருகே உள்ள பூதிப்புரம் தெலுங்கு செட்டியார் தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 67). இவர் கடந்த சில ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 12-ந்தேதி அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவருடைய மகன் நாகராஜ் (28) பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.