கஞ்சா விற்ற முதியவர் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-09-10 17:16 IST

தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் மேற்பார்வையில் தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் தனிப்படை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடி ரவுண்டானா பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியை சேர்ந்த செல்வின் என்ற செல்வம் (வயது 62) என்பதும், அவர் சட்டவிரோத விற்பனை செய்ய கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனே தனிப்படை போலீசார் செல்வத்தை கைது செய்து அவரிடமிருந்த 500 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். செல்வம் மீது ஏற்கனவே தென்பாகம் போலீஸ் நிலையத்தில் 6 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்