பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த முதியவர் கைது
பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த முதியவர் கைது செய்யப்பட்டார்;
மொரப்பூர்:
மொரப்பூர் அருகே உள்ள ஆர்.கோபிநாதம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனவர் பாஷா. இவருடைய மனைவி தாஜின் (வயது 50). முனவர் பாஷா கடந்த 10 மாதத்துக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சுபான் பாஷா (60) என்பவர் தாஜீனுக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்றும் அப்பெண்ணை சுபான் பாஷா தகாத வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் மொரப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த சுபான் பாஷாவை கைது செய்தார்.