வாகனம் மோதி மூதாட்டி பலி

விக்கிரவாண்டி அருகே வாகனம் மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-08-10 18:45 GMT

விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் வள்ளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மரியா (வயது 60).இவர் நேற்று முன்தினம் வழுதாவூர் கூட்டுரோடு பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தொியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் மரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்