குளத்தில் தவறி விழுந்து மூதாட்டி பலி

குளத்தில் தவறி விழுந்து மூதாட்டி பலியானார்.;

Update: 2023-05-22 17:18 GMT

ஆரணி

குளத்தில் தவறி விழுந்து மூதாட்டி பலியானார்.

ஆரணியை அடுத்த பையூர் எம்.ஜி.ஆர். நகர் நேரு தெருவை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மனைவி ரமணி (வயது 68). இவர் நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை பையூர் பாறை குளம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது கால் தவறி குளத்தில் விழுந்ததாக தெரிகிறது. இதனிடையே நீண்ட நேரமாக இவர் வீடு திரும்பாததால் அக்கம் பக்கத்தில் தேடினர். இந்த நிலையில் பாறை குளம் பக்கமாக ரமணி சென்றதாக அக்கம் பக்கத்தில் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து குளத்தில் தவறி விழுந்திருக்கலாமோ என்று எண்ணி சிலர் இறங்கி குளத்தில் தேடிப் பார்த்தனர். இது குறித்து ஆரணி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி ரமணியின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக அவரது மகன் செந்தில் ஆரணி தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்