சின்னசேலம் ரெயில் நிலையத்தில் அதிகாரி ஆய்வு

சின்னசேலம் ரெயில் நிலையத்தில் அதிகாரி ஆய்வு செய்தாா்.;

Update:2023-04-27 00:15 IST

சின்னசேலம்:

சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் பங்கஜ்குமார், தனி ரெயிலில் கோட்ட ரெயில்வே அதிகாரிகளுடன் சின்னசேலம் ரெயில் நிலையத்திற்கு வந்தார். இவரை சின்னசேலம் ரெயில் நிலைய மேலாளர் அபய்குமார் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து கோட்ட ரெயில்வே மேலாளர் பங்கஜ்குமார், அடிப்படை வசதிகள், பயணிகள் நடை மேம்பாலம், பாதுகாப்பு வசதிகள், கண்காணிப்பு கேமரா, பயணிகளின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் சின்னசேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை இணைக்கும் புதிய ரெயில் பாதை பணிகள் குறித்து பொறியாளர்களிடம் கேட்டார். பின்னர் அதே ரெயிலில் அவர் விருத்தாசலத்துக்கு சென்றார். 

Tags:    

மேலும் செய்திகள்