கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிய நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள், ஊழியர்கள்
கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிய நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள், ஊழியர்கள்
நுகர்பொருள் வாணிப கழகத்தை முடக்கும் நோக்கோடு கூட்டுறவு துறையில் இருந்து மண்டல மேலாளர் நிலை பணியிடங்களுக்கு நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். தனியார் மயமாக்கும் முடிவையும், டெண்டர் முறையில் சுமைப்பணி முறைகளையும் கைவிட வலியுறுத்தி நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள், ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்று பணியில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். அதன்படி திருவாரூர் நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்கள், ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். இதில் அனைத்து தொழிற்சங்கங்கத்தினர் பங்கேற்றனர். இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக அனைத்து அலுவலகங்களில் உள்ள அலுவலர்கள், ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.