காளான் வளர்ப்பு பண்ணையில் அதிகாரி ஆய்வு

மடத்துக்குளம் வட்டாரத்தில் காளான் வளர்ப்பு பண்ணையில் தோட்டக்கலைத்துறை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-09-15 16:10 GMT

போடிப்பட்டி

மடத்துக்குளம் வட்டாரத்தில் காளான் வளர்ப்பு பண்ணையில் தோட்டக்கலைத்துறை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.

தோட்டக்கலை பண்ணை

மடத்துக்குளம் வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் பல்வேறு மானிய திட்டங்களை மத்திய , மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக நுண்ணீர் பாசனத் திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்கம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள். மேலும் சங்கராமநல்லூரை அடுத்த மடத்தூரில் செயல்பட்டு வரும் மாநில தோட்டக்கலை பண்ணையில் காய்கறி நாற்றுகள் மற்றும் பழச்செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

மடத்தூரில் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மாநில தோட்டக்கலை பண்ணையை தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை-மலைப் பயிர்கள் துறை இயக்குனர் பிருந்தா தேவி ஆய்வு செய்தார். தோட்டக்கலை பண்ணையில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் அருகிலுள்ள அமராவதி அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கான வழிகளை ஆராய்ந்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து அனுப்புமாறு உத்தரவிட்டார்.

காளான் வளர்ப்பு

மடத்துக்குளம் வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை சார்பாக செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2022-23-ல் வேடப்பட்டி விவசாயி தோட்டத்தில் ரூ.1 லட்சம் அரசு மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான காளான் வளர்ப்புக்கூடத்தை ஆய்வு செய்தார். காளான் வளர்ப்பு விதம் மற்றும் விற்பனை குறித்து விவசாயியிடம் பேசிய அவர் ஆலோசனைகளை வழங்கி உற்சாகப்படுத்தினார். பின்னர் தேசிய தோட்டக்கலை இயக்கம் 2022 -23-ல் பரப்பு அதிகரித்தல் இனத்தின் கீழ் மெட்ராத்தி ராமே கவுண்டன் புதூரில் உள்ள விவசாயி தோட்டத்தை ஆய்வு செய்தார்.


Tags:    

மேலும் செய்திகள்