கோவில் திருவிழாவில் ஆபாச நடனம்; 5 பேர் மீது வழக்கு
பொன்னமராவதி அருகே கோவில் திருவிழாவில் ஆபாச நடனமாடியது தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பொன்னமராவதி ஒன்றியம் மேலைச்சிவபுரி ஊராட்சியில் கோவில் திருவிழாவையொட்டி ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் சிலர் ஆபாசமாக நடனம் ஆடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, விழா ஒருங்கிணைப்பாளர்கள் 5 பேர் மீது பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.