"ஓ.பன்னீர்செல்வம்தான் தனிக்கட்சி தொடங்க வேண்டும்" : கடம்பூர் ராஜூ

அ.தி.மு.க. கட்சி, சின்னம் எங்களிடம் தான் உள்ளது என்றும், “ஓ.பன்னீர்செல்வம்தான் தனிக்கட்சி தொடங்க வேண்டும்” என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-22 18:45 GMT

கோவில்பட்டி:

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கோவில்பட்டியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஓ.பன்னீர்செல்வம் நடத்திய கூட்டத்தில் ஏமாற்றத்தின் வெளிப்பாடாகவே அவர் பேசியுள்ளார். அவர் இருக்கும் போதுதான் உள்கட்சி அமைப்பு தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை கொண்டு தான் பொதுக்குழு கூட்டம் நடந்தது. பொதுக்குழுவில் வைக்கப்பட்ட வரவு- செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. கட்சி மற்றும் சின்னம் ஆகியவை எடப்பாடி பழனிசாமியிடம் தான் உள்ளது. ஆகவே தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஓ.பன்னீர்செல்வம்தான் தனிக்கட்சி தொடங்க வேண்டும்.

அ.தி.மு.க.வுடன் தான் பா.ஜ.க. கூட்டணியில் உள்ளது. நானும் ரவுடி தான் என்று வடிவேலு சொன்ன மாதிரி பா.ஜ.க. தனக்கு மரியாதை தருகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறிவருகிறார். அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார்.

டி.டி.வி. தினகரன், சசிகலா என யாருடன் வேண்டுமானாலும் ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி வைத்துக் கொள்ளலாம். அது அவரது விருப்பம்.

இவ்வாறு அவர் கூறினார்.

-------------

Tags:    

மேலும் செய்திகள்