சத்துணவு ஊழியர்கள்மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-04-17 18:45 GMT

ஆர்ப்பாட்டம்

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நேற்று மாலை ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மணிமேகலா தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் கொளஞ்சிவாசு சங்க கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சத்துணவு ஊழியர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி தேர்தல் கால வாக்குறுதியான சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

கோரிக்கைகள்

குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். பணி கொடையாக பொறுப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். கியாஸ் சிலிண்டரை அரசே ஏற்று நடத்த வேண்டும்.

காலை சிற்றுண்டி சத்துணவு திட்டத்துடன் இணைக்க வேண்டும். உணவூட்டு செலவினத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட 7 அம்ச கோரிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முன்னதாக சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் செல்வராணி நன்றி கூறினார்.

அரியலூரில்...

இதேபோல் அரியலூர் அண்ணா சிலை அருகே சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராஜவேம்பு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் செயற்குழு உறுப்பினர் செல்வி, மாவட்ட செயலாளர் காமராஜ், மாவட்ட தலைவர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்