சத்துணவு ஊழியர்கள் கையெழுத்து இயக்கம்

சத்துணவு ஊழியர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.;

Update:2023-08-18 00:20 IST

காரியாபட்டி, 

காரியாபட்டி வட்டார சத்துணவு ஊழியர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரத்த கையெழுத்து இயக்கம் நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு சங்க துணைத்தலைவர் அன்னலட்சுமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தாலுகா செயலாளர் சீராளன், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், சங்க மாவட்ட இணை செயலாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 10 ஆண்டுகள் பணி முடித்த சத்துணவு ஊழியர்களை அனைத்து துறை காலிபணியிடங்களை நிரப்பி வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டே நடத்த வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு ஊதியம் ரூ.7,650 வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ரத்த கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்