சத்துணவு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க மாவட்ட தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார். இதில் கிராம உதவியாளர்களுக்கு இணையாக அகவிலைப்படியுடன் கூடிய ரூ.6,750 மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும் நாளன்று பணப்பலன்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் சங்க மாநில துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் நடராஜன் மற்றும் நிர்வாகிகள் ராஜவேலு, லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.