ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சியில் ரூ.7¾ லட்சத்தில் சத்துணவு மையம்
ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சியில் ரூ.7¾ லட்சத்தில் சத்துணவு மையம்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உள்பட்ட நஞ்சேகவுண்டன்புதூரில் ரூ.7¾ லட்சம் செலவில் சத்துணவு மையம் கட்ட பூமி பூைஜயுடன் பணிகள் தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் அகத்தூர் சாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அபுதாஹீர் முன்னிலை வகித்தார். கவுன்சிலர் கலைச்செல்வி சுசீந்திரன் வரவேற்று பேசினார். இதைத்தொடர்ந்து சத்துணவு மையம் கட்டும் பணிகளை தரமாகவும், குறித்த நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும் ஒப்பந்ததாரர்களிடம் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சிகள் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.