நர்சிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

நர்சிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-07-27 19:25 GMT

செந்துறை அருகே உள்ள நந்தியன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சரிதா. இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படித்து வந்தார். நேற்று முன்தினம் கிராமத்துக்கு வந்த சரிதா தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த குவாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சரிதா 6 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்