தென்காசி சாந்தி பன்நோக்கு மருத்துவமனையில் செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது. மருத்துவமனையின் நிறுவனர் டேவிட் செல்லதுரை தலைமை தாங்கினார். தலைமை டாக்டர் தமிழரசன், டாக்டர் அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவமனையில் உள்ள அனைத்து செவிலியர்களும் இணைந்து செவிலியர் தினத்தை கொண்டாடினர். விழாவில் அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டனர்.