இன்றும், நாளையும் மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு

இன்றும், நாளையும் மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு

Update: 2023-09-03 18:45 GMT

வேதாரண்யம் தாலுகா வேட்டைக்காரன் இருப்பு துணைமின் நிலையத்தில் இன்று(திங்கட்கிழமை) நாலுவேதபதியில் உயர் அழுத்த முன் பாதையில் புதிதாக உயர் அழுத்தமின் பாதை அமைக்க உள்ளது. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் வேட்டைக்காரன்இருப்பு, கோவில்பத்து, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி இடங்களுக்கு இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. அதேபோல் ஆயக்காரன்புலம் துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே இந்த துணைமின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் ஆயக்காரன்புலம், பன்னாள், கடினல்வயல், மருதூர், குரவப்புலம், சிறுதலைகாடு, கருப்பம்புலம் ஆகிய பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் ராஜமனோகரன் தெரிவித்துள்ளார்.

திருமருகல் துணை மின் நிலையத்தில் மின்பாதைகளில் புதைவிட கேபிள் பணிகள் இன்று(திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் திருமருகல், சீயாத்தமங்கை, கணபதிபுரம், திருப்புகளூர், மருங்கூர், கட்டுமாவடி ஆகிய பகுதிகளுக்கு இன்று மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை நாகை உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) சதீஷ் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்