மனைவியின் நகைகளை திருப்பிக் கொடுக்காதஆசிரியர் மீது வழக்கு

தேனி அருகே மனைவியின் நகைகளை திருப்பி கொடுக்காத ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-07-15 18:45 GMT

தேனி அருகே கோட்டூரை சேர்ந்தவர் தெய்வேந்திரன் (வயது 65). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவருடைய மகள் ஜமுனாராணியும், அதே ஊரைச் சேர்ந்த மலைச்சாமி என்பவரும் கடந்த 2007-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தனர். மலைச்சாமி ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். திருமணத்துக்கு பிறகு ஜமுனாராணியின் பெற்றோர், 35 பவுன் நகைகளை சீர்வரிசையாக கொடுத்ததாக கூறப்படுகிறது.

கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஜமுனாராணி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து தனது மகளுக்கு கொடுத்த 35 பவுன் நகைகளை மலைச்சாமியிடம் தெய்வேந்திரன் திருப்பிக் கேட்டார். ஆனால் அவர் திருப்பிக் கொடுக்கவில்லை. இதுகுறித்து தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தெய்வேந்திரன் புகார் செய்தார். அதன்பேரில் மலைச்சாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்