டிக்கெட் இல்லாமல் முன்பதிவு பெட்டியில் பயணித்த வடமாநிலத்தவர்கள் - பயணிகள் கடும் அவதி

ரெயில்களில் தொடரும் வடமாநில தொழிலாளர்களின் அத்துமீறலால் முன்பதிவு பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

Update: 2023-03-01 05:27 GMT

ஈரோடு,

ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை, நெல்லை, மதுரை, நாகர்கோவில், சேலம், கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, மும்பை உள்பட பல்வேறு மாநிலங்களுக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களின் முன்பதிவு பெட்டிகளில் டிக்கெட் இல்லாமல் , வட மாநில தொழிலாளர்கள் ஏறி, டிக்கெட் வைத்துள்ளோரின் இருக்கைகளை ஆக்கிரமித்து செல்வதோடு, முன்பதிவு செய்து செல்லும் பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஈரோடு ரெயில் நிலையத்தில் டிக்கெட் இல்லாமல் 5 முன்பதிவு பெட்டியில் வடமாநிலத்தவர்கள் ஏராளமானோர் பயணம் செய்ததாக பயணிகள் புகார் அளித்துள்ளனர். முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த 50க்கும் மேலான வடமாநில தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வடமாநிலத்தவர்கள் பெட்டியில் மேலேயும், கீழேயும் ஏறி உட்காந்துள்ளனர். இந்த சம்பவத்தை பயணி ஒருவர் வீடியோ எடுத்து மத்திய அமைச்சர், தெற்கு ரெயில்வேக்கு டுவிட்டர் மூலம் புகார் அளித்துள்ளார். பல ரயில்களில் பரிசோதகர்கள் டிக்கெட் பரிசோதனை செய்ய வருவதில்லை எனக் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடரும் வடமாநில தொழிலாளர்களின் அத்துமீறலால் முன்பதிவு பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்