வடகிழக்கு பருவமழை: தாம்பரம் மாநகராட்சியில் இடர்பாடுகள் குறித்த புகார்களுக்கு அவசர எண்கள் அறிமுகம்
தாம்பரம் மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழை இடர்பாடுகள் குறித்த புகார்களுக்கு அவசர எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை,
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 16-ம் தேதி வாக்கில் நிலவக்கூடும். இதன் காரணமாக இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அவ்வப்போது ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் , தாம்பரம் மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழை இடர்பாடுகள் குறித்த புகார்களுக்கு அவசர எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது
கட்டணமில்லா தொடர்பு எண்கள் 1800 425 4355, 1800 425 1600 ஆகிய எண்களை அழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. +91 84383 53355 என்ற எண்ணில் வாட்ஸ்-ஆப் மூலமும் புகாரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.