உருக்கிய இரும்பு திரவம் கொட்டி வடமாநில தொழிலாளி படுகாயம்
உருக்கிய இரும்பு திரவம் கொட்டி வடமாநில தொழிலாளி படுகாயம்
கிணத்துக்கடவு
பீகார் மாநிலம் கிராம்பெல்வா பகுதியை சேர்ந்தவர் குட்டுகுமார்(வயது 23). இவர் கிணத்துக்கடவு அருகே குருநல்லிபாளையத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் குட்டுகுமார் சம்பவத்தன்று 500 கிலோ எடை கொண்ட உருக்கிய இரும்பு திரவம் கொண்ட பக்கெட்டை கன்வேயர் மூலம் மோல்டிங் செய்யும் இடத்திற்கு நகர்த்தி செல்ல முயன்றார். அப்போது பக்கெட்டில் இருந்து உருக்கிய இரும்பு திரவம் தவறி குட்டுகுமார் மீது கொட்டியது. இதனால் படுகாயமடைந்த குட்டு குமாரை சக தொழிலாளர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.