வடமாநில தொழிலாளி வெட்டிக்கொலை

ராஜபாளையம் அருகே வடமாநில தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2022-09-12 19:05 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே வடமாநில தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

பிளாஸ்டிக் குழாய்கள் தயாரிக்கும் ஆலை

ராஜபாளையம் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் பகுதியில் முத்து கிருஷ்ண ராஜா என்பவர் பிளாஸ்டிக் குழாய்கள் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார். மாடியில் உள்ள பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் சிலர் வேலை செய்து கொண்டிருந்தனர்.

வழக்கத்திற்கு மாறாக மாடி அமைதியாக இருந்துள்ளது. இதனால் கீழ் பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்களுக்கு சந்தேகம் எழுந்தது. உடனே அவர்கள் மாடிக்கு சென்று பார்த்த போது தரை முழுவதும் ரத்தக்கறையாக இருந்தது.

வெட்டிக்கொலை

ரத்தக்கறையை தொடர்ந்து சென்று பார்த்த போது, மாடியின் பின்புற படிக்கட்டில் பீகாரை சேர்ந்த தொழிலாளி ரஞ்சித் (வயது 40) என்பவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சக தொழிலாளியுடன் ஏற்பட்ட தகராறில் ரஞ்சித் வெட்டிக்கொலை செய்யப்பட்டதும், அவரது உடலை மறைத்து வைத்துவிட்டு கொலையாளிகள் தப்பி ஓடியதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து ரஞ்சித்தின் உடலை கைப்பற்றிய தெற்கு போலீசார் பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை ெகாலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்