தாம்பரம்,
அருணாச்சலபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் அபுக்கம் (வயது 21). இவர் தாம்பரம் சானடோரியம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த 2 மாதங்களாக மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல அபுக்கம் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது பொருட்களை ஏற்றி செல்ல பயன்படுத்தப்படும் லிப்டின் கீழ்பகுதியில் நின்று வேலை செய்து கொண்டு இருந்தபோது தவறுதலாக லிப்டின் சுவிட்சில் அவரது கை பட்டது. இதனால் லிப்ட் மேலிருந்து கீழே இறங்கியதில் அவர் மேல் விழுந்து அபுக்கம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இது குறித்த தகவல் அறிந்த தாம்பரம் போலீசார் அவரது உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.