குடி போதையில் தண்ணீர் குழிக்குள் விழுந்த வடமாநில தொழிலாளி சாவு

குடி போதையில் தண்ணீர் குழிக்குள் விழுந்த வடமாநில தொழிலாளி இறந்தாா்.

Update: 2022-10-09 21:14 GMT

பெருந்துறை

பீகார் மாநிலம், லக்கிதுறை மாவட்டம், ககவூர் என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர் செந்துகுமார் ராவத் (வயது 32). இவர் பெருந்துறையில் உள்ள தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இதற்காக நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விடுதியில் இருந்து வேலை செய்து வந்தாக கூறப்படுகிறது. மேலும் இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது.

நேற்று முன்தினம் சம்பளத்தை வாங்கி கொண்டு விடுதியை விட்டு வெளியே சென்ற அவர் மது குடித்து உள்ளார். பின்னர் குடிபோதையில் வந்தபோது பெருந்துறை- சென்னிமலை ரோட்டோரம் உள்ள தண்ணீர் குழிக்குள் விழுந்து விட்டார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அவருடைய நண்பர்கள் விரைந்து சென்று தண்ணீர் குழிக்குள் விழுந்து கிடந்த செந்துகுமார் ராவத்தை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே செந்துகுமார் ராவத் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறந்து போன செந்துகுமார் ராவத்துக்கு ரோதிகுமாரி தேவி (30) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் மூவரும் பீகாரில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்