வட மாநில சிறுமி தற்கொலை

வட மாநில சிறுமி தற்கொலை

Update: 2022-08-24 17:11 GMT

கோவை

பீகார் மாநிலம் நவாடா பகுதியை சேர்ந்தவர் கரு ராஜ்பன்ஜி (வயது42). இவர் கோவைமாவட்டம் மைலம்பட்டி பிள்ளையார் கோவில் தோட்டம் பகுதியில் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இவரது மூத்த மகள் சிந்து குமாரி (16). இவர் வீட்டு வேலை செய்யாமல் விளையாடிக் கொண்டே இருந்ததால் பெற்றோர் திட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் விரக்தியடைந்த சிந்து குமாரி நேற்று காலை 7 மணியளவில் வீட்டில் தனியாக இருந்தபோது, அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்