வடமாநில தொழிலாளியை கத்தி முனையில் மிரட்டி செல்போன், பணம் பறிப்பு - 2 பேர் கைது

வடமாநில தொழிலாளியை கத்தி முனையில் மிரட்டி செல்போன், பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-17 07:47 GMT

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள குத்தம்பாக்கம் பகுதியில் தனியார் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த சமர் கோத்தியா (வயது 25) என்பவர் தங்கி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் வேலை முடித்துவிட்டு தன்னுடைய அறைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். குத்தம்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த 2 பேர் கத்தி முனையில் மிரட்டி அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன் மற்றும் ரூ.2 ஆயிரத்தை பறித்துகொண்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து அவர் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் கத்திமுனையில் தொழிலாளியை வழிமறித்து பணம் பறித்து தப்பிச்சென்றது திருவள்ளூரை அடுத்த மேல்மணம் பேட்டையை சேர்ந்த ராஜேஷ் (31), அவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த விஷ்வா (22) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் மேற்கண்ட 2 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜேஷ் மீது 4 கொலை வழக்கும், விஷ்வா மீது 2 கொலை வழக்கும் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்