வட மாநில தொழிலாளர் விவகாரம்: சீமான் மீது வழக்குப்பதிவு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;
சென்னை,
வட மாநில தொழிலாளர் விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வட மாநிலத்தவர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசிய புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 13 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் வட மாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.