பொதுத்தேர்வு முடியும் வரை மின் நிறுத்தம் செய்யக்கூடாது - அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு

கோடைகாலத்தின் போது சீரான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தியுள்ளார்.;

Update:2024-03-01 15:40 IST

கோப்புப்படம் 

சென்னை,

தமிழ்நாட்டில் தடையில்லா சீரான மின்சாரத்தை விநியோகிக்க அனைத்து தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் அதிகாரிகள் உடனான ஆய்வுக்கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, கோடைகாலத்தின் போது சீரான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில், பராமரிப்புக்காக மின் நிறுத்தம் செய்ய வேண்டாம் என்றும் தேர்வு காலம் முடியும் வரை துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கோடைகால மின் தேவை எந்தவித பற்றாக்குறையும் இல்லாமல் பூர்த்தி செய்யப்படும் என்று கூறிய அமைச்ச தங்கம் தென்னரசு தொடர்ச்சியாக மின்தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்