ஸ்ரீரங்கம் கோவில் கணக்கை மத்திய கணக்கு தணிக்கைத்துறை மூலம் தணிக்கை செய்ய வேண்டிய அவசியம் இல்லை - ஐகோர்ட்டு உத்தரவு

ஸ்ரீரங்கம் கோவில் கணக்குகளை மத்திய கணக்கு தணிக்கைத்துறை மூலம் தணிக்கை செய்ய கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

Update: 2022-12-14 13:59 GMT

சென்னை.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வரவு-செலவு கணக்கு விவரங்களை மத்திய கணக்கு தணிக்கை குழு மூலமாக தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அதில், ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கணக்கு விவரங்களை ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தணிக்கை செய்து வருவதால், மத்திய கணக்கு தணிக்கைத் துறையினரைக் கொண்டு தணிக்கை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு உத்தரவிடவும் முடியாது. தற்போது கோவில் நிர்வாகமும் மாற்றப்பட்டு விட்டது. எனவே, இந்த வழக்கு செல்லாததாகி விட்டது. அதனால், வழக்கை தள்ளுபடி செய்கிறோம்" என்று உத்தரவிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்