மெட்ரோ திட்டத்திற்கான தளவாட கொள்முதலில் முறைகேடு நடைபெறவில்லை - அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு பதில்
டெண்டர் முறையாக நடைபெற்றதால் அரசுக்கு 250 கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது என தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
கடந்த 2010-ம் ஆண்டு சென்னை மெட்ரோ ரெயில் முதலாவது கட்ட திட்டத்திற்கு தளவாடங்களை கொள்முதல் செய்ய அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் அப்போத்தைய அரசுக்கு 200 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கியதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு மெட்ரோ ரெயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் டெண்டர் முறையாக நடைபெற்றதால் அரசுக்கு 250 கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது என தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.