ஒன்றிய பகுதிகளில் எந்த வளர்ச்சிப் பணியும் நடைபெறவில்லை

ஒன்றிய பகுதிகளில் எந்த வளர்ச்சிப் பணியும் நடைபெறவில்லை என சோளிங்கர் ஒன்றியக்குழு கூட்டத்தில் குற்றம்சாட்டினர்.

Update: 2023-05-22 17:45 GMT

சோளிங்கர் ஒன்றியக் குழு கூட்டம் தலைவர் கலைக்குமார் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் பூங்கொடி ஆனந்தன் வரவேற்றார். ஒன்றிய குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது ஒன்றியக் குழு கூட்டம் பெயரளவுக்கு மட்டுமே நடைபெறுவதாகவும், எந்தவித வளர்ச்சி திட்டப் பணிகளும் நடைபெற வில்லை. அதிகாரிகள் மற்றும் ஒன்றிய குழு தலைவர் அதற்கான நடவடிக்கை எடுப்பதில்லை என கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு வைத்தனர்.

மேலும் கோடை காலம் என்பதால் கிராமப்புறங்களில் தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வழி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர். கூட்டத்தில் பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் அமர்ந்து கொண்டு அதிகாரிகளை கேள்வி கேட்டதால் யார் கவுன்சிலர் என தெரியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

மேலும் பல்வேறு கிராமப்புறங்களில் உள்ள பாழடைந்த பள்ளி கட்டிடங்களை சீரமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என ஒன்றியக்குழு குழு தலைவர் கலைக்குமார் தெரிவித்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் தனசேகர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரா மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்