திருப்பூரில் கடந்த 4 மாதங்களாக நூல்விலையில் மாற்றம் இல்லாததால் பின்னலாடை துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூரில் கடந்த 4 மாதங்களாக நூல்விலையில் மாற்றம் இல்லாததால் பின்னலாடை துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர்
திருப்பூரில் கடந்த 4 மாதங்களாக நூல்விலையில் மாற்றம் இல்லாததால் பின்னலாடை துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முக்கிய மூலப்பொருள்
திருப்பூர் பின்னலாடை தயாரிப்புக்கு முக்கிய மூலப்பொருளாக இருப்பது நூலாகும். தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன் அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயார் செய்வார்கள். நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டால் தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும். கடந்த ஆண்டில் அடிக்கடி நூல் விலை உயர்ந்து வந்தது. எனவே நூல் விலையை குறைக்க தொழில்துறையினர் வலியுறுத்தி வந்தனர்.
தொழில்துறையினர் மகிழ்ச்சி
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 20 ரூபாய் நூல் விலை குறைந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் நூல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஜனவரி மாத நிலையே தொடரும் என நூற்பாலைகள் அறிவித்தன. இதைத்தொடர்ந்து மார்ச் மாதத்திலும் நூல் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. இதேபோல் (நடப்பு) மே மாதத்திலும் நூல் விலையில் மாற்றம் இல்லை என நூற்பாலைகள் அறிவித்துள்ளன.
இருப்பினும் 10-ம் நம்பர் மற்றும் 16-ம் நம்பர் கோம்டு நூல் விலை மட்டும் 5 ரூபாய் உயர்ந்துள்ளது. (திருப்பூரில் இந்த வகை நூல்கள் அதிக அளவில் பயன்படுத்துவது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது) மற்ற நூல் வகைகள் அனைத்தும் கடந்த மாதத்தை போலவே அதேநிலை தொடரும் என நூற்பாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதன்படி கடந்த 4 மாதங்களாக நூல் விலை அதிகரிக்காமல் ஒரே விலையில் இருப்பது திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
நூல் விலை விவரம்
நூல்விலை விவரம் வருமாறு:-
ஒரு கிலோ 10-வது நம்பர் கோம்டு நூல் ரூ.185-க்கும், 16-ம் நம்பர் ரூ.195-க்கும், 20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.253-க்கும், 24-ம் நம்பர் ரூ.265-க்கும், 30-ம் நம்பர் ரூ.275-க்கும், 34-ம் நம்பர் ரூ.295-க்கும், 40-ம் நம்பர் ரூ.315-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.245-க்கும், 24-ம் நம்பர் ரூ.255-க்கும், 30-ம் நம்பர் ரூ.265-க்கும், 34-ம் நம்பர் ரூ.285-க்கும், 40-ம் நம்பர் ரூ.305-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.