திருவள்ளுர் மாவட்டத்தில் போலீசாரின் இரவு ரோந்து பணியை கூடுதல் டி.ஜி.பி. சங்கர் ஆய்வு

திருவள்ளுர் மாவட்டத்தில் போலீசாரின் இரவு ரோந்து பணியை கூடுதல் டி.ஜி.பி. சங்கர் ஆய்வு செய்தார்.;

Update:2023-03-26 14:17 IST

தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு போலீஸ் நிலையங்களுக்கு திடீரென சென்று ஆய்வு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதே போன்று கூடுதல் டி.ஜி.பி. சங்கர் இரவு நேர ரோந்து பணி முறையாக இருக்கிறதா? என்பதை திடீரென்று ஆய்வு செய்து வருகிறார். அதன்படி அவர், திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். கடைவீதிகள், முக்கிய சந்திப்புகளில் இரவு நேர ரோந்து பணி, வாகன தணிக்கை முறையாக நடக்கிறதா? என்பதை கண்காணித்தார்.

ரோந்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம், குற்றச்செயல்கள் நடைபெறாத வகையில் மிகுந்த விழிப்புடன் ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கினார். இந்த ஆய்வு பணியின்போது வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன், டி.ஐ.ஜி. பகலவன், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகெர்லா செபாஸ் கல்யாண் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்