வராகி அம்மன் கோவிலில் நெய்தீப வழிபாடு
பள்ளுர் வராகி அம்மன் கோவிலில் நெய்தீப வழிபாடு நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த பள்ளுர் கிராமத்தில் பழமை வாய்ந்த வராகி அம்மன் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமியை அடுத்த 5-வது நாளில் கிருஷ்ண பஞ்சமி என்கிற தேய்பிறை பஞ்சமி வழிபாடு நடைபெற்றுவருகிறது. இந்த மாதத்திற்கான தேய்பிறை பஞ்சமி வழிபாடு நேற்று நடைபெற்றது. இதில் பக்தர்கள் தேங்காய் மற்றும் பூசணிக்காயில் நெய்தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.
நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் குடும்பத்தில் உள்ள பிரச்சினை, குழந்தையின்மை, திருமண தடை, தொழில் தடை ஆகியவை விலகும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த பஞ்சமி வழிபாட்டில் பிற மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.