சென்னைக்கு நிகராக கோவை விமான நிலையம் மேம்படுத்தப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொழில் முனைவோர்கள் ஆலோசனை கூட்டத்திலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்
கோவை,
கோவை, நீலகிரியில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு கோவைக்கு வந்தார்.
கோவை, வ.உ.சி. மைதானத்தில் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 'பொருநை' அகழ்வு ஆராய்ச்சி கண்காட்சி இன்று தொடங்கி வைத்தார் .
தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவிய கண்காட்சியை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார் .கீழடி, கொடுமணலில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
தொடர்ந்துஅவினாசியில் நடைபெற்ற தொழில் முனைவோர்கள் ஆலோசனை கூட்டத்திலும் அவர் பங்கேற்றார்.
இதில் பேசிய முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கூறியதாவது ;
சென்னைக்கு நிகராக கோவை விமான நிலையம் மேம்படுத்தப்படும்.கோவை விமான நிலையத்தை தரம் உயர்த்த ரூ.1,032 கோடி நிதி ஒதுக்கீடு.கோவையில் புதிய பெருந்திட்டம் உருவாக்கப்படும் .
தமிழகத்தின் 2-வது பெரிய தொழில் நகரம் கோவை மாவட்டம்.உற்பத்தி, ஏற்றுமதி உள்ளிட்டவற்றில் கோவை சிறந்து விளங்குகிறது.கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் அறிவுசார் பூங்கா அமைக்கப்படும்
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது திமுக ஆட்சியில் இதுவரை 5 முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டுள்ளது.