நாலாட்டின்புத்தூர் அருகே மனநலகாப்பகத்தில் புத்தாண்டு நிகழ்ச்சி
நாலாட்டின்புத்தூர் அருகே மனநலகாப்பகத்தில் புத்தாண்டு நிகழ்ச்சி நடந்தது.
நாலாட்டின்புத்தூர்:
நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள முடுக்கு மீண்டான்பட்டியில் ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் நடத்தும் மனநல காப்பகத்தில் புத்தாண்டை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட மன நல திட்ட மருத்துவர் நிரஞ்சனா தேவி தலைமை வகித்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசுகள் வழங்கினார். ஆக்டிவ் மைண்ட்ஸ் தலைவர் தேன் ராஜா, சமூக பணியாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உடற்கல்வி ஆசிரியர் நவீன் பாலாஜி விளையாட்டு போட்டிகளை நடத்தினார். இசை நாற்காலி, பலூன் உடைத்தல், கேரம் போர்டு, சதுரங்க விளையாட்டு, பாம்பு கட்டம், பாட்டிலில் நீர் நிரப்புதல், போன்ற விளையாட்டுகள் நடை பெற்றது. நிகழ்ச்சியில் காப்பக மேற்பார்வையாளர் மாடசாமி, கைத்தொழில் பயிற்சியாளர் அந்தோணி ரோஸி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.