களத்தூரில் புதிய மின்மாற்றி

களத்தூரில் புதிய மின்மாற்றியை மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. இயக்கி வைத்தார்.

Update: 2023-05-10 18:45 GMT

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே களத்தூரில் செயல்பட்டு வந்த மின்மாற்றி பழுதடைந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்வினியோகம் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். இதை தவிர்க்க களத்தூரில் புதிய மின்மாற்றி அமைக்க மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். இதையடுத்து களத்தூரில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு உளுந்தூர்பேட்டை கோட்ட பொறியாளர் சர்தார் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் சிவராமன், அய்யம்பெருமாள், சேந்தநாடு இளநிலை பொறியாளர் ராமச்சந்திரன், உளுந்தூர்பேட்டை துணை மின் நிலைய இளநிலை பொறியாளர் அம்சவல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான ஏ.ஜே.மணிக்கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய மின்மாற்றியை இயக்கி வைத்தார். இதில் முகவர் ரங்கராஜன், மின்பாதை ஆய்வாளர் ராஜமாணிக்கம் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்