ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை அறிய புதிய பரிசோதனைக்கருவி; சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்

இதய நோய்களின் முன்னெச்சரிக்கை மதிப்பீடுகளை பெறலாம்: ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை அறிய புதிய பரிசோதனைக்கருவி சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

Update: 2023-04-18 18:41 GMT

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி. விஞ்ஞானிகள், ரத்த நாளங்களின் ஆரோக்கியம் மற்றும் வயதை மதிப்பீடு செய்வதற்கும், அதன்மூலம் இதய நோய்களுக்கான ஆரம்பக்கட்ட பரிசோதனையை வழங்குவதற்கும், உடல் செல்-நரம்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத புதுமையான சாதனத்தை உருவாக்கியுள்ளனர். 'ஆர்ட்சென்ஸ்' என்று அழைக்கப்படும் இந்தக்கருவி, நிபுணர்கள் அல்லாதவர்களும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு ரத்த நாள ஆரோக்கியத்தை மதிப்பிடவும், கணிக்கவும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது. 'இமேஜிங்' அல்லாத கணினி தளம் மூலம் இயக்கப்படும் தொழில்நுட்பத்தை சென்னை ஐ.ஐ.டி.-யில் உள்ள சுகாதார தொழில்நுட்ப புத்தாக்க மையம் உருவாக்கியுள்ளது.

இந்த கருவியைக்கொண்டு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் பரிசோதனை செய்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவில் 5 பயன்பாட்டு காப்புரிமைகளை பெற்றுள்ள இத்தொழில்நுட்பம், 10 வடிவமைப்பு காப்புரிமைகளுடன், 28 காப்புரிமைகளை பெறுவதற்காக வெவ்வேறு அதிகார வரம்புகளில் காத்திருக்கிறது. விரிவான சோதனைக்குப்பிறகு தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் வணிகப்படுத்துதலுக்கு இந்தக்கருவி தயார் நிலையில் உள்ளது.

ஆண்டுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான ரத்த நாள சோதனை நடத்துவதற்கு இதனை பயன்படுத்தவேண்டும் என சென்னை ஐ.ஐ.டி. குழுவினர் விரும்புகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்