புதிய தாசில்தார் பொறுப்பேற்பு
குத்தாலத்தில் புதிய தாசில்தார் பொறுப்பேற்றுள்ளர்;
குத்தாலம்:
குத்தாலம் தாசில்தாராக என்.பி.இந்துமதி பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன்பு தரங்கம்பாடி தேசிய நெடுஞ்சாலை எண்.45 நில எடுப்பு தனி தாசில்தாராகவும், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும் பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு முன்பு குத்தாலம் தாசில்தாராக பணிபுரிந்து வந்த சரவணன் தரங்கம்பாடி தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.