மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்தில் மூத்த குடிமக்களுக்கான புதிய சேமிப்பு திட்டம் தொடக்கம்
மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்தில் மூத்த குடிமக்களுக்கான புதிய சேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டது.
இந்திய தபால்துறை மூத்த குடிமக்களுக்கு 'அகவை-60, அஞ்சல்-20' என்ற சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டோர் தனியாகவோ அல்லது வாழ்க்கைத் துணையுடன் கூட்டாகவோ இத்திட்டத்தின்கீழ் கணக்கை தொடங்கலாம். மாதம் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் ரூ.15 லட்சம் வரை 5 ஆண்டுகளுக்கு சேமிக்கும் வகையில் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயனாளிகளுக்கு 7.4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்தில் நடந்தது. விழாவிற்கு தபால் கோட்ட கண்காணிப்பாளர் ரமணி தலைமை தாங்கினார். இதில் மயிலாடுதுறை உதவி கலெக்டர் யுரேகா பங்கேற்று, பயனாளிகளுக்கு சேமிப்பு திட்ட அட்டையை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் மூத்த குடிமக்கள் பலர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.