ரூ.17 லட்சத்தில் புதிய சாலைப்பணிகள்-ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்

ரூ.17 லட்சத்தில் புதிய சாலைப்பணிகளுக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.

Update: 2022-10-13 20:13 GMT

இட்டமொழி:

பரப்பாடி சி.எஸ்.ஐ. சர்ச் வடக்குத்தெரு, போஸ்ட் ஆபீஸ் தெருக்களில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.17 லட்சம் மதிப்பில் புதிய பேவர்பிளாக் சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் சேகரத்தலைவர் கிறிஸ்டோபர் தவசிங், சேகரகுரு ஆபிரகாம் அருள்ராஜா, இலங்குளம் பஞ்சாயத்து தலைவர் வி.இஸ்ரவேல் பிரபாகரன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் டபிள்யு.ராஜசிங், ஓ.பி.சி. மாநில பொதுச்செயலாளர் ஜெஸ்கர்ராஜா, எழுத்தாளர் மதுரா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பத்மசிங்செல்வமீரான், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஜேக்கப்பாண்டி, சாலமோன், தி.மு.க. நாங்குநேரி ஒன்றிய இளைஞரணி செயலாளர் எஸ்.அருள்ராஜ் டார்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நாங்குநேரி யூனியன் அலுவலகத்தில் நடந்த அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாமை ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்கடன், இலவச தையல் எந்திரம், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுமதி, மாவட்ட மாற்றுத்திறனாளி நலஅலுவலர் பிரம்மநாயகம், மகளிர் உதவித்திட்ட அலுவலர் அன்னசெல்வம், நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி சின்னத்துரை, ஒன்றிய கவுன்சிலர் அகஸ்டின் கீதராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் யூனியன் ஆணையாளர் கிஷோர்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்