வடக்குத்து காந்திநகரில் புதிய ரேஷன் கடை சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

வடக்குத்து காந்திநகரில் புதிதாக அமைக்கப்பட்ட ரேஷன் கடையை சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

Update: 2022-06-22 16:51 GMT

நெய்வேலி,

நெய்வேலி அருகே வடக்குத்து ஊராட்சிக்குட்பட்ட காந்திநகர் பகுதியில் புதிதாக ரேஷன் கடை அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு பொது வினியோக திட்ட துணை பதிவாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலை குப்புசாமி, கூட்டுறவு சார்பதிவாளர்கள் நாகராஜன், புருஷோத்தமன், செல்லக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட வழங்கல் அலுவலர் ரோகினிராஜ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் கலந்து கொண்டு ரேஷன் கடையை திறந்து வைத்து, 1,082 பயனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். விழாவில் சேராக்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.  

Tags:    

மேலும் செய்திகள்